Tuesday, January 11, 2011 at 9:24 PM | 0 comments  
தற்போது கிடைத்த தகவல் : கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு


இயற்கையின் சீற்றத்துக்குள்ளாகியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடாது தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையினாலும் உடைப்பெடுத்துப்பாயும் ஆறுகளினால் மக்களின் வாழ்விடங்கல் நீரினால் நிரம்பி போனதால் இதுவரையில் 10 இலட்சம் வரையிலான மக்கள் நிர்க்கதி நிலையடைந்து அரச பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தனியார் கட்டிடங்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 82 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கிடைத்த தகவலின் படி பல இடங்களில் பல ஆறுகள் உடைப்பெடுத்தும், நிரம்பி வழிவதாலும் பல பிரதேசங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரியவருகின்றன, மதியத்திலிருந்து இவ் செய்தி வெளியிடப்படும் வரை பல இடங்களை நீர் மட்டம் இரண்டு அடிவரை உயர்ந்திருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாகவும் இதற்க்கு உதவியாக சமூக சேவை அமைப்புக்களும், சமூக சேவை ஆர்வாளர்களும் உதவிவருவதாக தெரியவருகின்றது.


புதிதாக பெருமளவான மக்கள் நலன்புரி முகாம்கலுக்கு இடம்பெர்ந்து வருவதால் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு அவசரமாக வழங்க வேண்டிய தேவையிருக்கின்றது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படாமையினால் மக்கள் பெரும் அவலத்தினை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் கண்டு முழுமையாக அந்த உதவிகள் அவர்களை சென்றடைய வேண்டும், இந்த வேலையில் கிராம சேவையர்கள் சரியாகவும், நேர்மையாகவும் நடர்ந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.உதவி வழங்கும் அமைப்புக்கள் உதவிகள் சரியாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இன, மத,அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றாக கைகோர்த்து அவலப்படும் கிழக்கு மாகாண மக்களுக்கு கைகொடுக்க வேண்டும். பொது அமைப்புகள், சமய நிறுவனங்கள், தொண்டர் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நிவாரண உதவிகளை இம்மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். பொதுமக்களும் தம்மால் இயன்ற உதவிகளை அரசினூடாகவோ அல்லது பொது அமைப்புகளினூடாகவோ வழங்க வேண்டும்.

தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்கு உடன் வழங்க தயாராக இருக்கின்றோம் அதுமட்டுமல்ல இவை தொடர்பான உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
Posted by Ugentheepan
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger templates